டென்னிஸ்

அமெரிக்க ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.இதன் காலிறுதி சுற்றில் சபலென்கா வெற்றி பெற்றார்.

மாலை மலர்

நியூயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குய்ன்வென் ஷெங் உடன் மோதினார்.

இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா இங்கிலாந்து வீரர் எம்மா நவாரோவை எதிர்கொள்கிறார்.