டென்னிஸ்

Madrid Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய ஒசாகா முதல் செட்டை 7-6 (7-1) என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய

சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடைபெறும் காலிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதுகிறார்.