டென்னிஸ்

Berlin Open டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சபலென்கா

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனில் நடந்து வருகிறது.

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் அலெக்சாண்டோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள காலிறுதியில் சபலென்கா, செக் குடியரசின் நிகோலா பர்டுன்கோவாவை சந்திக்க உள்ளார்.