டென்னிஸ்

Italy Open டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய சபலென்கா, கோகோ காப்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

சில முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் டெரிசா வேலண்டோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவை வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT