டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: காயத்தால் விலகிய முன்னணி வீராங்கனைகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் காயத்தால் முதல் சுற்றில் வெளியேறினர்.

மாலை மலர்

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா மற்றும் பெலாரசின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினர்.

பெலாரசின் விக்டோரியா அசரென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோத இருந்தார். தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதேபோல், பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எமினா பேக்தாசுடன் மோத இருந்தார். காயம் காரணமாக சபலென்காவும் போட்டியில் இருந்து விலகினார்.

முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா, விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் தொடரிலும் சபலென்கா காயம் காரணமாக காலிறுதியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.