டென்னிஸ்

Berlin Open டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா, பென்கிக் விலகல்

மிர்ரா ஆண்ட்ரீவா பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றவர்.

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நாளை தொடங்குகிறது. இதில் பெண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், ரஷியா வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா பெர்லின் ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதேபோல், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சமீபத்தில் முடிந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT