முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த 4-வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் ஜோடார், செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரபேல் ஜோடார் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில், பிரான்சின் ஆர்தர் பில்ஸ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-2, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் ரபேல் ஜோடார், ஆர்தர் பில்ஸ் உடன் மோதுகிறார்.