ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் மெத்வதேவை வீழ்த்திய ஸ்பெயினின் ரபேல் ஜோடார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ரபேல் ஜோடார் 6-3, 6-4 என எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இதேபோல முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.