டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: பென் ஷெல்டன், ரபேல் ஜோடார் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த காலிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், செக் குடியரசின் ஜேகுப் மென்சிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரபேல் பென் ஷெல்டன் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஜோடார் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான லேனர் டைன் உடனும், ரபேல் ஜோடார், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடனும் மோதுகின்றனர்.

SCROLL FOR NEXT