டென்னிஸ்

Berlin Open டென்னிஸ்: முதல் சுற்றில் பவுலா படோசா, முசோவா வெற்றி

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனில் நடந்து வருகிறது.

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, நெதர்லாந்தின் சூசன் லாமன்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பவுலா படோசா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜ்ச்ச்ங் சுசாயை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT