அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் பவுலா படோசா, கிரீசின் மரியா சக்காரி ஆகியோர் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று நடந்த மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, உக்ரைனின் யூலியாஸ்டாரோடப்ட்சேவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 1-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.