மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஸ்பெயின் வீராங்கனையான பவுலா படோசா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இவா ஜோவிக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்து 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.