டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் கஜகஸ்தான் வீராங்கனை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் ஸ்பெயின் வீராங்கனையான பவுலா படோசாவும், கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவும் மோதினர்.

இதில் சிறப்பாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்பெயின் வீராங்கனையான பவுலா படோசா முதல் சுற்றோடு வெளியேறினார்.

SCROLL FOR NEXT