டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா 4வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முசோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முசோவா முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக நவோமி ஒசாகா 2வது செட்டை 6-1 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய முசோவா 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் டாரியா ஸ்நைகரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT