டென்னிஸ்

Wimbledon Tennis: 4வது சுற்றுக்கு முன்னேறினர் நவோமி ஒசாகா, ஜெசிகா பெகுலா

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் ஜெசிகா பவுசஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டேரியா கசட்கினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் நான்காவது சுற்று போட்டியில் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை இவா ஜோவிக் உடன் மோதுகிறார்.