டென்னிஸ்

சிட்டி ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்

சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகெர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய நவோமி ஒசாகா 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ஒசாகா 3-1 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது அமெரிக்க வீராங்கனை காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் நவோமி ஒசாகா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், பிலிப்பைன்சின் அலெக்சாண்டர் ஈலா, இத்தாலியின் எலிசாபெட்டா ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் நவோமி ஒசாகா, இத்தாலியின் எலிசாபெட்டா உடன் மோதுகிறார்.