டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா வெற்றி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

மாலை மலர்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் சாரா எர்ரானி உடன் மோதினார்.

இதில் நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 2வது சுற்றில் நவோமி ஒசாகா, ஸ்பெயினின் பவுலா படோசா உடன் மோதுகிறார்.