மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 6 வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய ஜிரி லெஹெகா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் ஜிரி லெஹெகா, பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதுகிறார்.