டென்னிஸ்

Italy Open டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 8 வீரர் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 8 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான லாரன்சோ முசெட்டி, நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கேஸ்பர் ரூட் 6-3, 6-1 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நம்பர் 8 வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT