டென்னிஸ்

Stuttgard Open | இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் முசோவா

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் செக் குடியரசின் கரோலினா முசோவா, உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முசோவா முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஸ்விடோலினா 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அதிரடியாக ஆடிய முசோவா 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

SCROLL FOR NEXT