டென்னிஸ்

Stuttgard Open | முசோவா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் செக் குடியரசின் கரோலினா முசோவா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பெல்ஜியம் வீராங்கனை முதல் செட்டை 6-1 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அதிரடியாக ஆடிய முசோவா அடுத்த இரு செட்களையும் 6-3, 6-0 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT