டென்னிஸ்

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் முசோவா

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா முசோவா, ரொமானியாவின் எலினா கேப்ரில்லா ரூஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய முசோவா 6-4, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் முசோவா, ஜப்பானின் நவோமி ஒசாகாவை சந்திக்கிறார்.