பிரான்சில் நடைபெற்று வரும் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் தொடக்க சுற்றில் 13-ம் நிலை வீரரான ரஷியாவின் அந்த்ரே ரூப்லெப், போர்ச்சுக்கலை சேர்ந்த நுனோ போர்ஜெஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ரூப்லெவ் 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 1-6 என அதிர்ச்சிகரமாக இழந்தார். ஆனால், 3-வது செட்டை 6-1 எனக் கைப்பற்றி போர்ஜெஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ரூப்லெவ் முதல் சர்வீஸ் மூலம் 77 கேம்களை கைப்பற்றினார். ஆனால் போர்ஜேஸ் 78 சதவீதம் வெற்றி பெற்றார்.
ரூப்லெவ் 3/6 பிரேக் பாயிண்ட்களும், போர்ஜெஸ் 2/4 பிரேக் பாயிண்ட்களும் பெற்னர். ரூப்லெவ் 71 பாயிண்ட்களும், பொர்ஜெஸ் 66 பாயிண்களும் வென்றனர்.