பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, தரவரிசையில் 361வது இடத்தில் உள்ள பிரான்சின் லூயிஸ் போய்சன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய போய்சன் 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நடப்பு தொடரில் இருந்து மிர்ரா ஆண்ட்ரீவா வெளியேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் போய்சன், கோகோ காப்பை எதிர்கொள்கிறார்.