பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவை ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா வீழ்த்தினார்.
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.
இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் மூன்றாம் நிலையில் இருக்கும் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரீவா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சபலென்காவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 ஒரு மணி 2 நிமிடம் தேவைப்பட்டது.
ஆண்ட்ரீவா தொடக்க ஆட்டத்தில் உக்ரைனின் எலினா சுவிடோலினாவை தோற்கடித்து இருந்தார். கடைசி லீக் ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முசோவாவை சந்திக்கிறார்.
சபலென்கா தொடக்க ஆட்டத்தில் முசோவாவை தோற்கடித்து இருந்தார். சபலென்கா கடைசி லீக் போட்டியில் சுவிடோலினாவை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் உள்ள உக்ரைனின் எலினா சுவிடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 7-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா முசோவாவை தோற்கடித்தார். அவர் பெற்ற முதல் வெற்றியாகும்.
சபலென்கா-சுவிடோலினா இடையே நடைபெறும் ஆட்டத்தில் வெல்பவர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.