சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா முன்னேறினார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் நிகோலா பர்டுன்கோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஆண்ட்ரீவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆண்ட்ரீவா சீனாவின் குயின்வென் ஜெங் அல்லது பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டனைச் சந்திக்க உள்ளார்.
கடந்த ஜூலையில் நடந்த பிரெஞ்சு ஓபனில் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.