டென்னிஸ்

மியாமி ஓபன்: சபலென்கா, ரிபாகினா, பெகுலா, பென்சிக், காஃப் காலிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதியில் ரிபாகினா- பெகுலா, பென்சிக்- காப் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

மாலை மலர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசைச் சேர்ந்த சபலென்கா சீனாவைச் சேர்ந்த ஜெங் கின்வென்னை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுக்கு முன்னேறினார்.

ரிபாகினா

3-ம் நிலை வீராங்கனையாக உக்ரைனின் ரிபாகினா ஆஸ்திரேலியாவின் தலியா கிப்சனை எதிர்கொண்டார். இதில் ரிபாகினா 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜெசிகா பெகுலா

5-ம் நிலை வீராங்கனையாக அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ருமேனியாவைச் சேர்ந்த ஜாக்குலின் கிறிஸ்டியனை எதிர்கொண்டார். இதில் பெகுலா 6-4, 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

கோகோ காஃப்

அமெரிக்கோவின் கோகோ காஃப் ருமேனியாவின் சோரானா சிர்ஸ்டியாவை எதிர்கொண்டார். முதல் செட்டை காஃப் 6-4 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 3-6 என இழந்தார். ஆனால் 3-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றி சிர்ஸ்டியாவை வீழ்த்தினார்.

கனடாவைச்சேர்ந்த பென்சிக், அமெரிக்காவின் அனிசிமோவாவை 6-2, 6-2 என வீழ்த்தினார்.

நாளை நடைபெறும் காலிறுதி போட்டிகளில் ரிபாகினா- பெகுலா, பென்சிக்- காப், சபலென்கா- அமெரிக்காவின் ஹெ்லி பாப்டிஸ்டை எதிர்கொள்கிறார்.