டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் பென் ஷெல்டன், மென்சிக்

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று நடந்த 4-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரேசிலின் ஜோவ் பொன்சேகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரபேல் பென் ஷெல்டன் 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் செக் குடியரசின் ஜேகுப் மென்சிக், நெதர்லாந்தின் போடிக் வான் டே உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மென்சிக் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் பென் ஷெல்டன், மென்சிக் உடன் மோதுகிறார்.