டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ், ஸ்வரேவ் முதல் சுற்றில் வெற்றி

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

மாலை மலர்

பீஜிங்:

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லாரன்சோ சொனெகாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.