அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-4 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் டெரன்ஸ் ஆத்மனேவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் அல்லது ரஷியாவின் கரண் கச்சனாவ் உடன் மோதுகிறார்.