கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தற்போது மூன்றாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் நேற்று நடந்த போட்டியில் தரவரிசையில் 8வது நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் ஜேன் லென்னார்டு ஸ்ட்ரப் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜேன் லென்னார்டு 7-6 (7-4), 7-6 (7-5), 7-5 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் நான்காவது சுற்றில் ஜேன் லென்னார்டு போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதுகிறார்.
இதன்மூலம் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தோல்வி அடைந்து விம்பிள்டன் தொடரில் இருந்து வெளியேறினார்.
கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.