சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பிராண்டன் நகஷிமா அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-1 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான டேனில் மெத்வதேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.