மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 2வது சுற்றுக்கு முன்னணி வீரர்கள் நேரடியாக தகுதி பெற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பெரேட்டினி 6-0, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் 2வது சுற்றில் தோல்வி அடைந்த டேனில் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.