ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் நேரடியாக தகுதிபெற்றார்.
இன்று நடந்த 2-வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் ஜேன் லென்னார்டு உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.