அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள 4வது சுற்றில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதுகிறார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டாமி பால் 6-4, 3-6, 6-7 (4-7), 6-1, 6-3 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.