டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய மெத்வதேவ்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் மெத்வதேவ் ஸ்வரேவ் அல்லது ஜோகோவிச் உடன் மோதவுள்ளார்.

SCROLL FOR NEXT