வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் டேனியல் மெரிடா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் பிளேவியோ கோபாலி 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதுகிறார்.