டென்னிஸ்

Madrid Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய உக்ரைன் வீராங்கனை

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் உக்ரைன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், செக் குடியரசின் லிண்டா நோஸ்காவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய கோஸ்ட்யூக் 7-6 (7-1), 6-0 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT