டென்னிஸ்

French Open டென்னிஸ்: முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் இன்று தொடங்கியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், ரஷியாவின் செலிக்மேடேவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மர்டா கோஸ்ட்யூக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

சமீபத்தில் நடந்த மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் மர்டா கோஸ்ட்யூக் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT