டென்னிஸ்

Madrid Open டென்னிஸ்: முதல் முறையாக கோப்பை வென்றார் உக்ரைன் வீராங்கனை

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நேற்று நடந்தது. இதில் உக்ரைன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், நம்பர் 9 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக விளையாடிய கோஸ்ட்யூக் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக மேட்ரிட் ஓபன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கும் கோஸ்ட்யூக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT