டென்னிஸ்

வூஹான் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த மரியா சக்காரி

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் கிரீசின் மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் கிரீசின் மரியா சக்காரி, போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சாவ்லின்ஸ்கா முதல் செட்டை 6-0 என எளிதில் வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய மரியா சக்காரி 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய சாவ்லின்ஸ்கா 7-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT