டென்னிஸ்

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன்: காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த மரியா சக்காரி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடரின் காலிறுதிப் போட்டியில் கிரீசின் மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. கிரீசின் மரியா சக்காரி ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிப்சன் 6-1 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக மரியா சக்காரி 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய கிப்சன் 6-2 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT