வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கிரீசின் மரியா சக்காரி, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் குடியரசின் சாரா பெஜ்லெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பவுலினி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீசின் மரியா சக்காரி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் குரோசியாவின் டோனா வெகிக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.