டென்னிஸ்

வூஹான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய மரியா சக்காரி, ஸ்விடோலினா

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு கிரீசின் மரியா சக்காரி, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் முன்னேறினர்.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, சீனாவின் குவோ ஹன்யூ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்விடோலினா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீசின் மரியா சக்காரி 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோவோகியாவின் மியா போஹன்கோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT