ஸ்வீடனில் நடந்து வரும் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரரான லாரன்சோ சொனேகோ 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையா் பிரிவின் முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ சொனேகோ, பிரான்சின் குயின்டின் ஹாலிஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய லாரன்சோ சொனேகோ 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, பிரிட்டிஷின் கேமரூன் நூரி ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.