சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்றுடன் காலிறுதி சுற்று போட்டிகள் முடிந்தன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தியாபே 7-6 (7-2), 7-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா 7-6 (11-9), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான டெய்லர் பிரிட்சை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை அதிகாலை நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா, பிரான்சிஸ் தியாபே உடன் மோதுகிறார்.