டென்னிஸ்

வியன்னா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் இத்தாலி வீரர்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி முதல் சுற்றில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய முசெட்டி 7-6 (8-6), 7-5 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் 6-1, 4-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT