டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது செக் குடியரசு ஜோடி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடந்தது.

இதில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா-மேரி பவுஸ்கோவா ஜோடி, ரஷியாவின் அலெக்சாண்ட்ரா பனோவா-பெல்ஜியத்தின் மகாலி கெம்பென் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய செக் குடியரசு ஜோடி 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

ஆண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நாளை அதிகாலை நடக்கவுள்ளது.

SCROLL FOR NEXT