டென்னிஸ்

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் லிண்டா நோஸ்கோவா அதிர்ச்சி தோல்வி

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, ரொமானியாவின் எலினா கேப்ரில்லா ரூஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கேப்ரில்லா ரூஸ் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லிண்டா நோஸ்கோவா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் லிண்டா நோஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.