டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசை: டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த லிண்டா நோஸ்கோவா

செக் குடியரசின் கரோலினா முசோவா ஒரு இடம் சரிந்து 11வது இடத்தில் உள்ளார்.

பெண்கள் மட்டும் பங்கேற்ற பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா.

இந்நிலையில், பெண்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது. இதில் பெர்லின் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 3 இடங்கள் முன்னேறி டாப் 10 பட்டியலில் நுழைந்தார்.

செக் குடியரசின் கரோலினா முசோவா ஒரு இடம் சரிந்து 11வது இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, 2வது இடத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, 3வது இடத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.